தென்கொரியாவில் கொரோனா பரவலுக்கு காரணமான மதத்தலைவருக்கு நேர்ந்த கதி!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென் கொரியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு காரணமான நபராக கூறப்படும் மதத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தங்கள் நாட்டில் இந்த வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் கொரியாவில் கடந்த பிப்வரி மற்றும் மார்ச் மாதங்களில் கொரோனா நோய்த்தொற்று திடீரென அதிகரித்தது. அந்த நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டயேகு நகரம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறி அந்த நகரிலுள்ள ஷின்செயோன்ஜி தேவாலயத்தில் ஆயிரக்கண்ககானவா்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், இதுவே கொரோனா பரவல் தீவிரமடைந்ததற்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.

தற்போது தென் கொரியாவில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,200-க்கும் மேற்பட்டவா்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று, ஷின்செயோன்ஜி தேவாலயம் மூலம் பரவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை குறித்த தேவாலயம் மறுத்து வருகிறது.

இதையடுத்து இதுதொடா்பாக நடைபெற்று வந்த விசாரணையில், தேவாலயத்தின் தலைமை குரு லீ மான்-ஹீயை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதையடுத்து, 88 வயதான லீ மான்-ஹீயை அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்