ஏழு மில்லியன் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்ற செய்த பயங்கர புயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் பயங்கர புயல் ஒன்று நெருங்கி வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஏழு மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

Haishen புயல் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் காரணமாக பலத்த மழையும் கார்களை தூக்கி வீசும் அளவுக்கு பலத்த காற்றுகளும் ஜப்பானை புரட்டிப்போட இருப்பதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

அதன்படி ஏழு மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ஆனால், ஜப்பானை நெருங்கும் நேரத்தில் புயல் வலுவிழந்தது. அது தென் கொரியாவை நோக்கி செல்வதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது.

என்றாலும் கன மழை, பலத்த காற்று மற்றும் பயங்கர அலைகள் எழும்பும் அபாயம் இருப்பதால் மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்