கொரோனா வைரஸ் உணவு மூலம் பரவுகிறதா? சீனா கூறுவது உண்மையா? தெளிவுப்படுத்திய ஐ.நா

Report Print Basu in ஏனைய நாடுகள்
278Shares

கொரோனா வைரஸ் இறக்குமதி செய்யப்படும் உணவுகளில் கண்டறியப்பட்டதாக சீனா பலமுறை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து ஐ.நா விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸ் உணவு வர்த்தகம் மூலம் பரவியது என்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை, இதுபோன்ற அறிக்கைகள் ‘குறைக்கப்பட வேண்டும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) தலைமை பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரோரோ கல்லன் தெரிவித்தார்.

ஏற்றுமதி செய்யும் நாடுகளின் உணவு தயாரிப்பில் கொரோனா தொற்று தோன்றியதாக கண்டறியப்படவில்லை என உலகளாவிய தானிய மாநாட்டில் மாக்சிமோ டோரோரோ கல்லன் கூறினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

20 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பாக்கெட்டில் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாக சீனா கூறுகிறது.

ஆனால் சீனா அதிகாரிகள் வழங்கிய ஆதாரங்களில் குறைபாடு உள்ளதால் இது வர்த்தகத்தை சேதப்படுத்துகிறது என வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்