எதிரியின் பாராட்டை பெற்ற ராகுல் டிராவிட்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
209Shares
209Shares
ibctamil.com

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு, தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை, கிரிக்கெட்டில் எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது. இதில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட்டில் எதிரி அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், ராகுல் டிராவிட்டை பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் நதீம் கான் கூறுகையில், உலகக் கிண்ண அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது. இது ஏதோ மந்திரம் செய்ததுபோல் இருக்கிறது.

போட்டி முடிந்தவுடன், எங்களின் வீரர்களின் அறைக்கு வந்த டிராவிட், வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்கள் சிறப்பாக விளையாடியதாகவும் பாராட்டினார்.

இதுபோன்ற ஒரு மனிதரை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை. வெற்றி, தோல்விகளைத் தாண்டி, இளம் வீரர்களை ஊக்குவிக்கும் அவருடைய குணம், அவருக்கு மட்டுமே உண்டு’ என தெரிவித்துள்ளார்.

இதே போல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ரமீஸ் ராஜா முதல், ஷாகித் அப்ரிடி வரை அனைவரும் ராகுல் டிராவிட்டை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்