முகமது சமி தண்டிக்கப்பட வேண்டும்: கொதித்தெழுந்த ரசிகர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பல பெண்களுடன் தொடர்பு உள்ளதோடு, மனைவியை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது சமிக்கு எதிராக ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கொந்தளித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தகாத உறவு உள்ளதாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான சில ஸ்கீரின் ஷாட்களையும் வெளியிட்ட ஜகான், சமியும் அவர் குடும்பத்தாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார்.

ஆனால் இதையெல்லாம் மறுத்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க இப்படி செய்கிறார்கள் என சமி டுவிட்டரில் கூறினார்.

ஆனால் அவர் கருத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை, சமி மீது தான் தவறு உள்ளது என கூறும் ரசிகர்கள் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என டுவிட்டரில் ஆக்ரோஷமாக பதிவிட்டு வருகிறார்கள்.

இதோடு சமியை கிண்டலடிக்கும் விதமாகவும் பதிவுகளை எழுதி வருகிறார்கள்.

இதனிடையில், தற்போது வெளியாகி இருக்கும் பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. ஷமியின் பெயர் அனைத்து பட்டியலிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முன்னாள் வீரர்கள் பெயர் தான் பட்டியலில் இருந்து எடுக்கப்படும். ஆனால் முதல்முறையாக ஷமி பெயர் அணியில் இருக்கும் போதே பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணத்தை பிசிசிஐ இன்னும் தெரிவிக்கவில்லை.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்