நிதி நிறுவன மோசடி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக இந்நிறுவனத்தின் தலைவர் ராகவேந்திர ஸ்ரீநாத் என்பவர் மீது கடந்த திங்களன்று 66 பேர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதுவரையிலும் 1,776 பேர் மொத்தம் புகார் அளித்துள்ளதாக காவல்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.
இதனிடையே நிதிநிறுவன அதிபர் ராகவேந்திர ஸ்ரீநாத் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பணம் போட்டு ஏமாந்தவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட், ஒலிம்பிக் பதக்கம் வென்ற டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரும் அடங்குவார்கள்.
டிராவிட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த நிதி நிறுவனத்தில் 35 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்ததும், அந்த தொகையில் 20 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் ஏமாற்றப்பட்ட பிரபலங்கள் தரப்பிலிருந்து புகார்கள் இன்னும் வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்