ஆஷிபா குறித்து கோஹ்லியின் வீடியோ: சாட்டையடி கேள்வி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
289Shares
289Shares
ibctamil.com

சிறுமி ஆஷிபா பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விராட் கோஹ்லி பேசியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா எட்டு போர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் விராட் கோஹ்லி இது குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், சிலர் இப்படிப்பட்ட விடயங்கள் நடக்க அனுமதிக்கிறார்கள். அந்த விடயங்களை வேடிக்கையும் பார்க்கிறார்கள்.

உங்கள் குடும்பத்தில் இப்படி ஒன்று நடந்தால், அதையும் இதேபோல் நின்று வேடிக்கைதான் பார்ப்பீர்களா? இல்லை சென்று குரல் கொடுப்பீர்களா? என்னுடைய ஒரே கேள்வி இதுதான் என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.

முக்கியமாக சில ஆண்கள் இதுதான் வாய்ப்பு என்று தவறு செய்கிறார்கள். பின் அதில் இருந்து தப்பிக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களும், அதற்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

நம் சமூகத்தில் சிலர் இது போன்ற விடயங்களை எளிதாக சகித்துக் கொள்கிறார்கள். அதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இது போன்ற சமூகத்தில் இருக்கவே வெட்கமாக இருக்கிறது.

நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று நினைத்து பாருங்கள், பொறுப்பானவர்களாக இருங்கள். ஜெய் ஹிந்த் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்