டோனி மட்டும் இல்லைனா அந்த பெண்ணிடம் சிக்கி சின்னா பின்னாமாகியிருப்பேன்: ஷ்ரேயாஸ் ஐயர்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி வழங்கிய அறிவுரையால் தான் பல சிக்கல்களிலிருந்து தப்பியதாக இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், அவர் தற்போது தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய ஏ அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் சீனியர் அணியில் தெரிவு செய்யப்பட்ட போது, டோனி தன்னிடம் வந்து பத்திரிக்கைகள், சமூக வலைதளங்களில் இருந்து முடிந்த அளவு விலகியிருக்கும் படி கூறினார்.

ஆனால் சமூக வலைதளத்தில் வரும் சர்ச்சைகள் தான் என்னை முன்நோக்கி கொண்டு செல்ல உதவியதால் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அதே சமயம் ஐபிஎல் தொடரின் ஏலத்துக்கான செய்தி வெளியானது. அப்போது எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்தார்.

நானும் அவரிடம் தொடர்ந்து சாட்டிங் செய்த போது தான் தெரிந்தது. அவருக்கு என்னை விட என் பணத்தின் மீது தான் குறி அதிகம்.

இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். இதற்கு டோனி அன்று கூறிய அறிவுரை தான் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்