சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 2018ம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின.
முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
போட்டியை காண பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் வருகை தந்தனர்.
ஏராளமான சென்னை ரசிகர்களும் குவிந்திருந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் தலைவர் அஜய் தாக்குரின் அபாரமான ரைடுகளால் அதிக புள்ளிகள் குவிந்தது.
முடிவில் 42- 26 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை தோற்கடித்து தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்