இந்த விடயத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடிமையாகிட்டாங்களே! வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
176Shares

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பிரபலமான வீடியோ கேம் ஒன்றை தொடர்ந்து விளையாடி வருவது தெரியவந்துள்ளது.

இந்திய அணி அவுஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றுள்ளது. இந்த பயணத்தின் இடையே விமான நிலையத்தில் காத்திருந்த போது இந்திய அணி வீரர்கள் பலர் தங்கள் மொபைல் போனில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

பிசிசிஐ இதை படம் பிடித்து டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் மகிழ்ச்சியான முகத்துடன் இந்திய வீரர்கள் மற்றும் கேம் விளையாடும் பசங்க என குறிப்பிட்டு இந்திய வீரர்கள் பிரபலமான விளையாட்டான PUBGயை விளையாடி வரும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தது.

முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு நேரத்தில் பாட்டு கேட்பார்கள், புத்தகம் படிப்பார்கள். தற்போது ஆன்ட்ராய்டு காலத்தில் வீடியோ கேம் ஆடி மகிழ்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் மிக பிரபலமாக இருக்கும் ஒரு விளையாட்டு PUBG ஆகும்.

பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்களை வைத்து பார்த்தால் ரோஹித் சர்மா, தோனி, கேதார் ஜாதவ், க்ருனால் பண்டியா, மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் PUBG விளையாடுவதில் மிக ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்