பொள்ளாச்சியில என்ன நடக்குது? அஸ்வினுக்கு இது கூட தெரியலையே!

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

பொள்ளாச்சியில் நடப்பது குறித்து டுவிட்டரில் கேள்வி கேட்ட இந்திய வீரர் அஸ்வினை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மாணவர்களின் போராட்டமும் வெடித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி வீரரான அஸ்வின், பொள்ளாச்சியில் போராட்டமா? பொள்ளாச்சியில் நடப்பது குறித்து யாராவது எனக்கு கூற முடியுமா? என டுவிட் செய்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பிரபலம் என்றால் இதை கூடவா டுவிட்டரில் கேட்பது? என கடுமையாக வசை பாடி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்