2023 உலகக் கோப்பையில் பட்டைய கிளப்புறோம்..! இலங்கை தலைவர் திமுத் ஓபன் டாக்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

2019 உலகக் கோப்பை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்ட இலங்கை அணித்தலைவர் திமுத், 2023 உலகக் கோப்பைக்கு சிறப்பான திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்ன கூறியதாவது, 2023 உலகக் கோப்பை தொடருக்கான சிறப்பான அணியை உருவாக்க இலங்கை கிரிக்கெட் ஆணையம் ஆர்வமாக உள்ளது.

2015 உலகக் கோப்பை பிறகு நாங்கள் சிறந்த அணியை உருவாக்க தொடங்கினோம். ஆனால், துரதிஷ்டவசமாக தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் விளையாடவில்லை. பல வீரர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, ஒரு நல்ல செயல்திறனைக் கொடுக்கக்கூடிய வீரர்களை அடையாளம் காண முயற்சிக்கிறோம். அடுத்த உலகக் கோப்பைக்கு ஒரு திடமான 15 வீரர்களை உருவாக்க முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers