டோனி ஏன் இந்திய அணியில் தெரிவு செய்யப்படவில்லை... தெரிவுக்குழு தலைவர் விளக்கம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய டி-20 அணியில் டோனி ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறித்து இந்திய தெரிவுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டோனி, தற்போது வரை இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நேற்று வெளியான தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியிலும் டோனி பெயர் இடம்பெறவில்லை. டோனி இடம்பெறாதற்கான காரணம் குறித்து பிசிசிஐ அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், டோனி டி-20 அணியில் இடம்பெறாதது குறித்து இந்திய தெரிவுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, டோனி தான் தெரிவுக்கு முன்வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும். அவராகவே அணி தெரிவில் இருந்து தன்னை விலகிக்கொண்டார் என கூறியுள்ளார்.

நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். ராகுல் சாஹர், குருணால் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் கடந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டனர், மேலும் அவர்கள் இன்னொரு தொடருக்கு தகுதியானவர்கள்,

2020 டி-20 உலகக் கோப்பைக்கு செல்லும் ஆரோக்கியமான பலமான அணியை உருவாக்க பிசிசிஐ முயற்சிக்கிறது என்றும் பிரசாத் கூறினார்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்