இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஜீவன் மெண்டீஸ் கிறிஸ் கெயிலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளவர் ஜீவன் மெண்டீஸ்.
சிறந்த ஆல்ரவுண்டராக ஜீவன் மெண்டீஸ் திகழ்கிறார்.
இந்த நிலையில் டுவிட்டரில் ஜீவன் மெண்டீஸ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனது மகன், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் மற்றும் அவரின் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை மெண்டீஸ் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், லண்டனில் என் மகன் ஜோல் மற்றும் யூனிவெர்சல் பாஸ் கெய்ல் மற்றும் அவர் மகளுடன் எடுத்த பழைய புகைப்படம் இது என பகிர்ந்துள்ளார்.
Throwback with the Universe Boss @henrygayle, his daughter and my son Joel in London pic.twitter.com/sPKKMcVHge
— Jeevan Mendis (@jeevanmendis) October 13, 2020
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்