ஓய்வை அறிவித்துவிட்டு கவலைப்படும் உசைன் போல்ட்: ஏன் தெரியுமா?

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

ஓய்வு அறிவிப்பதில் ரொம்ப அவசரப்பட்டுவிட்டேனோ என்று ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

ஜமைக்கன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில், இன்றுடன் முடிந்த 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஜமைக்கா தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையே பெற்றுள்ளது.

மேலும், ஓட்டப்பந்தையப் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கமே இருந்தது.

தனது நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவைப் பார்த்த உசைன் போல்ட், “ரொம்ப சீக்கிரம் ஓய்வு அறிவித்துவிட்டேனோ?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்