சாம்சுங் உட்பட ஓரிரு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய கைப்பேசிகளை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தமை தெரிந்ததே.
இவ்வாறான நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தனது மடிக்கக்கூடிய கைப்பேசி தயார் என சாம்சுங் நிறுவனம் சில படங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் மடிக்கக்கூடிய கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களை தயாரிப்பதில் பெரிய சிக்கல் ஒன்று இருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மடிப்புக்கள் ஏற்படும் இடங்களில் மூட்டுக்களை உருவாக்குவதே குறித்த பிரச்சினையாகும்.
எவ்வாறெனினும் இரு திரைகளை இணைப்பதன் ஊடாக இதனை சாத்தியப்பட வைக்க முடியும் எனவும் ஒரு ஐடியாவினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விளக்கத்தினை தரும் சில படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.