பேஸ்புக்கிலிருந்து விலகிய எலன் மஸ்க்

Report Print Balamanuvelan in ஏனைய தொழிநுட்பம்

விண்வெளியில் கார் விட்ட எலன் மஸ்க் பேஸ்புக்கிலிருந்து தனது Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் கணக்குகளை அகற்றியுள்ளார்.

50 மில்லியன் பயனர்களின் தரவுகள் Cambridge Analytica என்னும் அரசியல் ஆய்வு அமைப்பினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அடுத்து பேஸ்புக்கிலிருந்து விலகுமாறு உலகம் முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.

இதையடுத்து அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வாளரான எலன் மஸ்க் தனது Tesla (TSLA) மற்றும் SpaceX பக்கங்களை பேஸ்புக்கிலிருந்து அகற்றியுள்ளார்.

ட்விட்டர் பயனர் ஒருவர் Tesla (TSLA) மற்றும் SpaceX பக்கங்களை பேஸ்புக்கிலிருந்து அகற்றுவீர்களா என்று கேட்டதற்கு, சர்வ சாதாரணமாக “நிச்சயமாக” என்று கூறியவர் பின்னர் இரண்டு பக்கங்களையும் அகற்றிவிட்டார்.

“நான் பேஸ்புக்கை பயன்படுத்துவதில்லை, இதனால் எனக்கு பெரிய நட்டம் ஏதுமில்லை” என்று அவர் கூறினார்.

பேஸ்புக்குடன் தொடர்புடைய இன்ஸ்டாகிராமையும் அகற்றுவீர்களா என்று கேட்டதற்கு “பேஸ்புக்கிலிருந்து தனித்திருக்கும்வரை இன்ஸ்டாகிராமால் எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறேன்” என்று எலன் மஸ்க் கூறினார்.

ஏற்கனவே எலன் மஸ்குக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க்குக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers