தொடரும் சர்ச்சைகளால் தனது புதிய திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தியது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பல மில்லியன் வரையான பயன்பாட்டாளர்களின் கணக்குகளை அனுமதியின்றி உளவு பார்க்க அனுமதித்ததாக பேஸ்புக் நிறுவனம் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பேஸ்புக் கணக்குகளை டெலீட் செய்யுங்கள் என்ற ஹேஸ்(#) டேக்கும் அறிமுகம் செய்து ட்ரெண்ட் ஆகியிருந்தது.

இதனால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டத்தினை குறுகிய காலத்தினுள் பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டிருந்தது.

இதனை அடுத்து முன்பே அறிவித்திருந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை உருவாக்கும் திட்டத்தினை தற்காலிகமாக அந்நிறுவனம் பிற்போட்டுள்ளது.

இவ் வருட இறுதிக்குள் குறித்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்ய பேஸ்புக் தீர்மானித்திருந்தது.

எனினும் தற்போது மேற்கண்ட பிரச்சினைக்கு ஓர் சுமுகமான நிலையை எட்டிய பின்னரே குறித்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers