சர்வதேச விண்வெளி நிலையத்தை வீட்டில் இருந்தவாறே பார்க்கலாம்: நாசா தரும் அற்புத வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சர்வதேச விண்வெளி நிலையமானது மணித்தியாலத்திற்கு 17,000 மைல்கள் என்ற வேகத்தில் பூமியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறது.

அதாவது இது ஒரு செக்கனுக்கு 5 மைல்களை கடக்கின்றது.

பூமிக்கு மேலே 240 மைல்கள் தெலைவிலுள்ள இந்நிலையம் பூமியை முழுதாகச் சுற்றிமுடிக்க 92 நிமிடங்கள் எடுக்கிறது.

இச் சர்வதேச விண்வெளி நிலையமே வானிலுள்ள மூன்றாவது பிரசாசமான பொருள்.

காரணம் இது சூரிய ஒளியை புவியை நோக்கித் தெறிக்கச்செய்கின்றது.

இவ் விண்வெளி நிலையம் சிமிட்டாத ஒளிப்பொட்டுப் போன்று வானில் கடும் வேகத்துடன் வலம்வருகிறது.

நாசவா நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க ஆவலாக இருப்போருக்கென "Spot the Station" எனும் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது.

இவ் வலைத்தளத்தில் நுளைந்து நீங்கள் வசிக்கும் பிரதேசத்தை உள்ளிடும்போது அது எப்போது உங்கள் பிரசேத்தைக் கடந்து செல்லும் என்ற தகவலை உங்களுக்குத் தந்துவிடுகிறது.

ஒருசில பகுதிகளில் 6 நிமிடங்கள் வரையில் காட்சியளிக்கும் விண்வெளி நிலையம் சில பகுதிகளில் வெறும் 1 அல்லது 2 நிமிடங்களே காட்சிதருகிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers