கடவுச்சொல் திருடப்படுவது தொடர்பில் எச்சரிக்கும் கூகுளின் புதிய நீட்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனமானது தனது குரோம் உலாவியைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக புதிய நீட்சி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நீட்சியானது ஹேக்கர்களால் கடவுச்சொல் திருடப்படவுள்ளமை தொடர்பில் எச்சரிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு Password Checkup எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் ஒன்லைன் கணக்குகளுக்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை தெரிந்தெடுக்கும்போது அவ் வகை கடவுச்சொற்கள் ஏற்கணவே ஹேக் செய்யப்பட்டுள்ளனவா எனவும் எச்சரிக்கின்றது.

கூகுளின் தரவுத்தளத்தில் சுமார் 4 பில்லியன் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச் சொற்கள் காணப்படுகின்றன.

இத் தரவுத்தளத்திலிருந்தும் ஏற்கணவே கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இப் பிரச்சினையை தவிர்க்கும் முகமாகவே இந்த நீட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தள முகவரி - https://chrome.google.com/webstore/detail/password-checkup/pncabnpcffmalkkjpajodfhijclecjno

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers