கூகுள் மேப்பில் 3 புதிய வசதிகள்: இந்த நாட்டில் உள்ளவர்களே முதலில் பயன்படுத்தலாம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகின் மூலை முடுக்கு எங்கும் எவ்வித அச்சமின்றி சென்றுவர கூகுள் மேப் பெரிதும் உதவிகரமானதாக இருக்கின்றது.

இவ்வாறான அப்பிளிக்கேஷனில் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மேலும் 3 புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்படி Explore Tab ஆனது மீள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், For You எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர Dining Offers எனும் மற்றுமொரு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ் வசதிகளை முதலில் இந்தியாவில் உள்ள பயனர்கள் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Explore Tab வசதியில் Restaurants, Petrol Pumps, ATMs, Offers, Shopping, Hotels மற்றும் Chemists போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேற்கண்ட வகையான இடங்கள் அருகில் எங்கிருக்கின்றன என்பதை பயனர்கள் தேடி அறிய முடியும்.

For You வசதியின் ஊடாக புதிய ரெஸ்ரோரண்ட், ட்ரெண்டிங் பிளேசஸ் உட்பட விருப்பமான தெரிவுகள் காண்பிக்கக்கூடிய வகையில் கட்டமைப்பு செய்ய முடியும்.

அதேபோன்று Dining Offers ஊடாக சலுகைகளை வழங்கும் ரெஸ்ட்ரோரண்ட் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்