மூளை நினைப்பதை இனி டைப் செய்ய முடியும்: பேஸ்புக்கின் அசத்தலான முயற்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சமூக வலைளத்தளங்கள் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்த வரிசையில் தற்போது மனிதர்கள் நினைப்பதை தானாகவே டைப் செய்யக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை நேற்றைய தினம் பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ளது.

தற்போது Moonshot எனும் திட்டத்தின் கீழ் இதற்கான ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (AI)விசேட கண்ணாடி ஒன்று உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இத் தொழில்நுட்பத்தின் ஊடாக நிமிடத்திற்கு 100 சொற்களை டைப் செய்ய வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வேகமானது சாதாரணமாக ஒருவர் மொபைல் சாதனங்களில் தட்டச்சு செய்யும் வேகத்தினை விடவும் 5 மடங்கு வேகம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers