உன்னுடன் ஒருநாள் வாழ்ந்தால் போதும் என்ற நளினி! முதல் பார்வையின் ஈர்ப்பு.. முருகன் - நளினியின் அழகான காதல்!

Report Print Raju Raju in உறவுமுறை

1991 ஆம் ஆண்டு முதல் முதல் சிறைச் சுவர்களுக்கு இடையிலேயே தொடர்ந்து வருகிறது நளினி- முருகன் காதல்!

யாழ்ப்பாணம் இத்தாவில் பிறந்தவர் முருகன் என்ற ஸ்ரீகரன். 1991-ம் ஆண்டு ஜனவரியில் தனது 19வது வயதில் கடல்வழியே சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர் தாஸ் என்று தனக்கு தானே புதிய பெயரை சூட்டிக்கொண்டார்.

2014 ஆம் ஆண்டு வழக்கறிஞரிடம் முருகன் தனது காதல் கதை குறித்து பகிர்ந்துகொண்டார்.

சென்னைக்கு வந்த புதிதில் பாக்கியநாதன் என்கிற தமிழ் ஆர்வலரின் வீட்டில் தங்கியுள்ளார் முருகன். நளினியின் தம்பி தான் பாக்கியநாதன்.

நான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போது ஆரம்பத்தில், நளினியின் தம்பி, தங்கை ஆகிய இருவரை மட்டுமே சந்தித்தேன். நளினியை சந்திக்கவில்லை.

ஒருமுறை நளினியின் அம்மா பத்மாவிடம் உங்கள் மூத்த மகள் நளினி எங்கே என்று கேட்டதற்கு அவர் அழுது கொண்டே, நளினி என்னிடம் கோபித்துக்கொண்டு பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என தெரிவித்தார்.

பத்மா அம்மாவிடம், உங்களது மகளை சேர்த்துவைக்கிறேன் என கூறினேன்.

பின்னர் 1991 பிப்ரவரி 8-ம் திகதி முதன்முதலாக அடையாறில் நளினியை சந்தித்துள்ளார் முருகன். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது.

அன்றைய தினம் எனது பிறந்த நாள் என்று தெரிந்தவுடன், என்னோடு வந்திருந்த அனைவரையும் அழைத்துச் சென்று எளிமையான ஒரு விருந்தை எனக்குப் பரிசாக அளித்தார்.

நான் எப்போதுமே என் பிறந்த நாளைக் கொண்டாடியது இல்லை. ஆனால், நளினி என் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

ஒருநாள் நளினிக்கு வேலை தாமதமாக முடிந்தபோது, என்னை அவர் தனியாக சைக்கிளில் ராயப்பேட்டை அனுப்ப விரும்பாமல், வில்லிவாக்கம் பெரியம்மா வீட்டுக்கு என்னையும் அழைத்துச் சென்றார்.

ஒரு பேருந்துப் பயணத்தில் முதன்முதலாக நாங்கள் இருவரும் நீண்ட நேரம் செலவிட்டது அப்போதுதான். நான் அவருக்கும் அம்மாவுக்கும் இடையிலான பிரிவு பற்றிப் பேசினேன்.

ஒரு கட்டத்தில் அவரது கண்ணீர் என் கைகளை நனைத்தது. அம்மாவுடன் இணையும் விடயத்தில், நான் நளினியின் மனதில் பாதியைக் கரைத்துவிட்டேன்.

இப்படியாக எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் ஒருநாள் தாயை காண நளினியை அழைத்து வந்தேன், சுமார் ஒரு வருடம் கழித்து அவருடைய அம்மாவையும் தம்பியையும் பார்த்தார். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது அது.

காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக்கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். உன்னோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும் என கூறினார்.

ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர, வேறு எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை.

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, ஏப்ரல் 22-ம் திகதி திருப்பதியில் வைத்து நளினியை மணந்து கொண்டேன்.

மே 21 இரவு, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி கேள்விபட்டதும் அதிர்ச்சி அடைந்தோம்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஐந்து நாட்கள் கழித்து தணுவின் படம் வெளிவந்தபோது பீதியில் உறைந்துவிட்டோம்.

மறுநாள் காலை நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்ற நிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்திருந்தோம்.

ஆனால், திருப்பதி போன மறுநாளில் இருந்து நளினி வாந்தி எடுக்கத் தொடங்கினார். அவர் கர்ப்பமாக இருந்தார். இதனால் தற்கொலை முடிவை கைவிட்டோம்.

பின்னர் சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது, எங்களைக் கைது செய்தது பொலிஸ்.

தனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே முருகனிடம் எஞ்சியிருக்கின்றன.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers