உடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத்தும்: விஞ்ஞானிகள் தகவல்

Report Print Kabilan in விஞ்ஞானம்
58Shares
58Shares
ibctamil.com

அண்ணாசி பழம் மூலமாக உடலில் ஏற்படும் காயங்களை எளிதில் குணப்படுத்தலாம் என பிரேசில் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிரேசிலின் கம்பினாஸ் பல்கலைக்கழக பேராசிரியை பிரசிலா மாசுலா தலைமையிலான ஆராய்ச்சிக் குழு ஒன்று, அண்ணாசி பழங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

இந்த ஆராய்ச்சியில், அண்ணாசி பழங்களானது நமது உடலில் ஏற்படும் காயங்களை எளிதாக ஆற்றும் தன்மை கொண்டவை என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, ஆராய்ச்சிக் குழுவினர் கூறுகையில் ‘அண்ணாசி பழங்களில் இருந்து எடுக்கப்படும் ஜெல் போன்ற திரவம், தோல் நிறமிகளை காக்கும் தன்மை கொண்டது. இதனை சிறிய அளவில் ஏற்பட்ட காயங்கள் மீது தடவினால் விரைவில் குணமடையும். கடைகளில் விற்கப்படும் மருந்துகளை விட, இவை உடனடியாக காயங்களை ஆற்றும்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக ஆராய்ச்சிக் குழு தலைவர் பிரசிலா தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்