இதுவரை அறிந்திராத புதிய வகை கனிப்பொருள்: உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஏறத்தாழ 7 தசாப்தங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட பொருள் ஒன்று தொடர்பில் நீண்ட காலமாக மர்மம் நீடித்து வந்தது.

எனினும் தற்போது அது ஒரு கனிப்பொருள் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியாவின் மத்திய பகுதியில் காணப்படும் Wedderburn எனும் இடத்தில் 1951 ஆம் ஆண்டு குறித்த பொருள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இப் பொருள் பார்ப்பதற்கு விண்கல்லினைப் போன்ற சாயலை கொண்டிருந்தது.

எனினும் 210 கிராம்கள் எடை கொண்ட அப் பொருள் என்ன என்பது தொடர்பில் 7 தசாப்தங்கள் வரையில் மர்மம் நீடித்து வந்தது.

இப்படியான நிலையிலேயே இதுவரை கண்டறியப்படாத புதிய கனிப்பொருள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Caltech mineralogist Chi Ma என்பவரது தலைமையில் இடம்பெற்ற ஆய்வு ஒன்றிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்