கணவனை பிரிந்து வேறொருவருடன் வாழ்ந்த பெண்ணின் குழந்தைக்கு நேர்ந்த கதி: செல்போனில் ஆபாச படங்கள் என அதிர்ச்சி தகவல்!

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் நளினி (24). இவருக்கும், பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (35) என்ற கட்டட மேஸ்திரிக்கும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

சிவக்குமார், குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கியிருந்து, கட்டட வேலைசெய்து வந்தார். அப்போது அங்கு, சென்னையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முரளி (24) என்பவருடன் நளினிக்கு, பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் அவர்கள் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இந்த விவகாரம்

கணவருக்கு தெரியவர, அவர், கண்டித்துள்ளார்.

இதுதான் சந்தர்ப்பம் என்று கணவனை பிரிந்த நளினி சமீபத்தில் பெண் குழந்தை மற்றும் இரண்டாவது மகனுடன், வாணியம்பாடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

முதல் மகனுடன் கணவர் சிவக்குமார் பெங்களூரிலேயே தனியாக வசித்துவருகிறார்.

பெற்றோருடனும் நளினி சண்டை போட்டதால், வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் வாடகைக்குத் தனியாக வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.

அங்கு கள்ளக்காதலன் முரளியும் சேர்ந்துவாழ்ந்தார். இதையடுத்து கடந்த 15-ஆம் திகதி மாலை, நளினி அதே பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, கள்ளக்காதலன் முரளி மட்டும் வீட்டில் குழந்தைகளுடன் இருந்துள்ளார். கடைக்குச் சென்றுதிரும்பிய நளினி, பெண் குழந்தை காயங்களுடன் மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

உயிரிழந்த பெண் குழந்தையின் கன்னத்தில் கையால் பலமாக தாக்கியிருப்பது, நகக் கீறல்கள், பற்களால் கடிக்கப்பட்டிருப்பது போன்ற அடையாளங்கள் பதிந்திருந்தன. பாலியல் வன்கொடுமை செய்து குழந்தை கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின் இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், நளினி மற்றும் அவரது காதலன் முரளியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது முரளியிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில், ஆபாசப் படங்கள் அதிகளவில் இருந்தன. எனவே, நளினி கடைக்கு சென்றுவந்த இடைப்பட்ட நேரத்தில், முரளி பாலியல் வன்புணர்வு செய்து குழந்தையை அடித்துக் கொன்றாரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்