பாலியல் தொழிலாளி மீது ஆசை! அவரை திருமணம் செய்ய நினைத்த நபர்... அடுத்து நடந்த கொடூர சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பாலியல் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவரை கொடூரமாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்த 32 வயதான நபருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணை பார்த்த அந்த நபருக்கு அவளை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து பாலியல் தொழிலாளியிடம், நீ இந்த தொழிலை விட்டு விடு, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் கூறினார்.

ஆனால் பாலியல் தொழில் செய்வதை விட முடியாது என கூறிய அப்பெண், அவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணை கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்