ஐ.எஸ் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல்... மயிரிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர்

Report Print Basu in தெற்காசியா

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது.

டாக்கா பெருநகர காவல்துறைத் தலைவர் அசாதுஸ்மான் மியா கூறியதாவது, சனிக்கிழமை இரவு மத்திய அமைச்சர் பயணித்த கார் டாக்காவின் பரபரப்பான தன்மொண்டி பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது என்று கூறினார்.

இந்த குண்டுவெடிப்பில் அமைச்சரின் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஒரு பொலிஸ்காரர் மற்றும் ஒரு போக்குவரத்து அதிகாரி என இருவரும் காயமடைந்தனர். காரில் பயணித்த உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் தாசுல் இஸ்லாம் காயமின்றி தப்பினார்.

ஐ.எஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்புப் பிரிவினர் இரண்டு அதிகாரிகளை குறிவைத்து ஐ.எஸ் படையினர், டாக்கா தெருவில் வெடிக்கும் சாதனத்தை வெடித்ததில் இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் கடுமையாக காயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த பொலிசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வங்கதேசத்தில் பொலிசார் மீது நடத்தப்பட்ட இதேபோன்ற தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்