அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண் கமலா:... உருக்கமான தகவல்களை பகிர்ந்த சித்தி

Report Print Fathima Fathima in தெற்காசியா
674Shares

இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண்ணான கமலா ஹாரிஸ், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவரது தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர், பெசன்ட் நகரில் வசித்து வந்தனர், கமலா தன்னுடைய சிறுவயதை சென்னையிலேயே கழித்தார்.

இந்நிலையில் கமலாவின் தாயார் முனைவர் பட்டப்படிப்பிற்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறினார்.

இவர்களது உறவினர்கள் இன்றளவும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட கமலாவின் சித்தி சரளா கோபாலன், குழந்தையாக இருந்ததில் இருந்தே கமலாவிடம் இருந்து மிகப்பெரிய விஷயங்களை நாங்கள் எதிர்பார்த்தோம்.

அவளின் படிப்படியான சீரான வளர்ச்சியை நான் பார்த்துக்கோண்டேதான் வருகிறேன். அவர் சரியான பாதையில்தான் பயணித்துக்கொண்டு வருகிறார்.

2017 ஆம் ஆண்டு அமெரிக்க செனட் சபை உறுப்பினராக கமலா பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சென்று இருந்தோம். இவ்வளவு உயரங்களை அடைந்தும் கமலா இன்னும் மாறவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அடிக்கடி பேசமுடியவில்லை என்றாலும் மெசேஜ் செய்து கொண்டே இருப்பார் என்றும், நேரம் கிடைக்கும் போது தங்களிடம் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

கமலாவின் இத்தகைய சாதனைக்கு அவளுடைய அம்மாவே காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்