தீபாவளியன்று என்ன என்ன செய்ய வேண்டும்?

Report Print Kavitha in ஆன்மீகம்

இந்துக்களின் சிறப்பான பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. இதனை தீப ஒளித்திருநாள் என்று அழைக்கப்படுகின்றது.

தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியன்று நாம் எல்லோரும் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

  • தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும்.
  • சுவாமி முன் வைத்துள்ள எண்ணெயை வீட்டிலுள்ள பெரியவர்கள் எடுத்து, சிறியவர்களுக்கு தலையில் தேய்த்து விட வேண்டும்.
  • வெந்நீரை பொறுக்கும் சூட்டில் எடுத்துக்கொண்டு குளிப்பதற்கு முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு, கொஞ்சம் நீரைக்கையில் எடுத்துக்கொண்டு கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.
  • நீராடியபின் புத்தாடை அணிந்து சுவாமி முன் கோலமிட்டு மஞ்சள் தூள், வெற்றிலை,பாக்கு,பழம், தேங்காய், பூ, புத்தாடை, பட்டாசு, பல காரங்கள் போன்றவற்றை வைத்து, தெரிந்த சுலோகங்களைச் சொல்லி( விஷ்ணு லட்சுமி, சிவ பார்வதி, குபேரன் துதிகளைச் சொல்வது சிறப்பு) தூப தீபம் காட்டி வணங்குதல் வேண்டும்.
  • அதன் பின்னர் பெற்றோர், பெரியோரை வணங்கி ஆசிபெற வேண்டும். பிறகு அவரவர் வழக்கப்படி முதலில் இனிப்பையோ அல்லது சிறிதளவு தீபாவளி லேகியத்தினையோ உண்ண வேண்டும்.
  • ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் கோடி நன்மைகள் உண்டாகுமாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers