பங்குனி உத்திர விரதம் : கல்யாணம் ஆகாத பெண்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டுமாம்!

Report Print Kavitha in ஆன்மீகம்

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் ஆகும்.

பங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்று சொல்லப்படுகின்றது.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம்.

இந்த விரதத்தினை திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகமாகும்.

இந்த விரதத்தினை கடைபிடிப்போர் நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர்.

பங்குனி உத்திர விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும்?
  • பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.
  • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப் பாடல்களை பாடலாம். அன்று முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம்.
  • முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.
  • மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers