இஷ்ட தெய்வங்களுக்கு படையல் போடும் வழிமுறைகள்!

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

படையல் வைப்பது ஒரு பூஜையின் கடைசி படியாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில பிடித்தமான உணவுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் பக்தர்கள் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றனர்.

விஷ்ணுவுக்கு பால் அல்லது பால் பாயசமும், கணபதிக்கு மோதகமும், அம்மனுக்கு கூழும் படைக்கப்படுகிறது.

இப்படி தெய்வத்திற்கு பிடித்த உணவுகளை பிரசாதமாக சமர்ப்பிப்பதன் மூலம் நிறைய நல்ல பலன்களை பெற முடியும் என்று சொல்கிறார்கள்.

படைத்த நைவேத்தியத்தை தெய்வங்கள் அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு மற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

பிரசாதத்தில் கடவுளின் சக்தி அதிகம் இருப்பதாக சாப்பிடும் அனைவருக்கும் நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது.

நைவேத்தியம் சமைக்கும்போது குறைந்த அளவு காரம், உப்பு மற்றும் எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். நெய் போன்ற சாத்வீக பொருட்களை நிறைய பயன்படுத்தலாம்.

படையல் போட வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும்.

கடவுளுக்காக தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தில் உப்பை இலையில் பரிமாறக் கூடாது.

நைவேத்தியம் படைக்கப்படும் இலையை மூடி வைக்கவும்.

இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டு கடவுள் முன்னால் தரையில் வட்டமாக கோலமிட்டு, கோலத்தின் மீது நைவேத்தியம் கொண்ட வாழை இலையை பரப்பி வாழை இலையின் காம்புப் பகுதி கடவுள் இருக்கும் திசையை நோக்கி இருக்கும்படியும் நுனிப்பகுதி உங்களை நோக்கி இருக்கும்படியும் வைக்கவும்.

Google

வாழை இலையை சுற்றிலும் வலமிருந்து இடமாக தண்ணீர் தெளிக்க வேண்டும். இரண்டு துளசி இலைகளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து பரிமாறப்பட வேண்டும். ஒரு துளசி இலையை நைவேததியத்தின் மீது வைக்க வேண்டும்.

மற்றொரு இலையை தெய்வத்தின் புனிதமான பாதத்தில் வைக்க வேண்டும். ஐந்து முக்கிய ஆற்றல்கள் ஆற்றல்களுடன் தொடர்புடைய மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.

நாம் சமர்ப்பிக்கும் நைவேத்தியம் கடவுளை சேருகின்றது என்றும், தெய்வம் அதை சாப்பிடுகின்றார் எனவும் நாம் ஒரு பக்தி பாவத்தை கொண்டிருக்க வேண்டும்.

நைவேத்தியத்தை படைத்த பிறகு (பொதுவாக சிறிய அளவுகளில்) மீதமுள்ள மொத்த உணவில் அதை கலந்துவிட வேண்டும். இதனால் உணவை சாப்பிடும் அனைவரும் பயன்பெறுவர்.

எந்தவொரு தெய்வத்திற்கும் நைவேத்தியம் படைக்கும்போது பக்தி பாவத்தோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

நைவேத்தியம் படைக்கும் பக்தனின் பக்தி பாவம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த உணவை தெய்வங்கள் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியங்களும் அதிகம்.

Facebook

மிளகாய், உப்பு மற்றும் எண்ணெய் போன்றவை ராஜ தாம குணங்களின் ஆதிக்கத்தை கொண்டிருப்பதால் நைவேத்தியத்திற்கு உணவு சமைக்கும் போது இவற்றை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும். அதிக நெய்யை பயன்படுத்தலாம் ஏனெனில் அது சாத்வீக உணவாகும். நெய் சேர்ப்பதால் இது மற்ற பொருட்களையும் சாத்வீகமாக்குகிறது.

தட்டில் / இலையில் முடிந்த வரை நிறைய சாத்வீக உணவுகளை சமைத்து பரிமாறவும் ஏனெனில் அத்தகைய உணவுகளுக்கு தெய்வங்களின் ஆசிர்வாத வடிவத்தில் வெளிப்படும் சாத்வீக அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது.

நைவேத்தியத்தை இறைவனுக்கு படைப்பதற்கு முன் ஏன் மூடி வைக்க வேண்டும்?

உணவை மூடி வைக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் அலைகள் வளிமண்டலத்தில் சேராமல் கட்டுப்படுத்துகிறது.

நீரூற்று போன்ற அலைகள் ஒரு தனிமனிதனைச் சுற்றியுள்ள சூழலில் ராஜ தாம குணங்களின் விகிதத்தை குறைக்க உதவுகிறது. எனவே தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைக்கும் போது இலையின் காம்புப் பகுதி கடவுளை நோக்கியும் அதன் முனைப் பகுதி நம்மை நோக்கியும் இருக்கும் படி பரிமாற வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்