கோவிலின் முன்பு நிர்வாண புகைப்படம் எடுத்த இளைஞர்கள்: இலங்கை பொலிசார் அதிரடி

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் புத்த கோவிலின் முன்பு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்ட இளைஞர்களில் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் புராதன கால புனித தலமான பிதுரங்கலா அருகே இளைஞர்கள் சிலர் நிர்வாண புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த விவகாரம் பலரது கோபத்தை தூண்டவே, புத்த சாமியார் உள்ளிட்ட பலர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

குறித்த புகைப்படமானது மத துவேஷம் என கூறியுள்ள அந்த புத்தமத சாமியார், தொடர்புடைய நபர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த புகைப்படம் தொடர்பில் இலங்கை பொலிசார் மூவரை கைது செய்துள்ளனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட உத்தரவின்படி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இதேபோன்று, குறித்த புனித தலத்தில் மேற்கத்திய சுற்றுலா பயணிகளால் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை இலங்கை பொலிசாரும் அரசாங்கமும் மேற்கொண்டது இல்லை என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் வெளிநாட்டவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளூர் மக்களுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொலிசாரின் இந்த கைது நடவடிக்கையானது ஒருதலைபட்சமாக அமைந்துள்ளது எனவும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இலங்கை பொலிசாரின் பல குழுக்களை உலகம் முழுவதும் அனுப்பி கைது நடவடிக்கையில் அரசு ஈடுபடுமா எனவும் சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி, எங்கள் பிள்ளைகள் பாலியல் வன்புணர்வுக்கு இரையான போதும், பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டபோதும் இலங்கை பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை எனவும் பலர் குமுறியுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்