இலங்கையில் மேலும் 160 தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா? வெளியாகும் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் பயிற்சி மேற்கொண்ட 160 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயிற்சி பெற்றுக் கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த தீவிரவாதிகளை கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம், காவல்துறை மற்றும் அரசாங்கத்தினால் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வனாத்தவில்லு பிரதேசத்தில் 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தௌபீக் ஜமாத் தீவிரவாத முகாம் முற்றுகையிட்டப்பட்ட போது இந்த தகவல்கள் அம்பலமானதாக கூறப்படுகிறது.

குறித்த முகாமில் ஆயுத பயிற்சி, தற்கொலைக் குண்டுத்தாக்குதல் பயிற்சி போன்றன வழங்கப்பட்டுள்ளன.

இந்த முகாமில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், முகாமிற்கு அடிக்கடி இந்த தீவிரவாத இயக்கத்தின் தலைவராக கருதப்படும் சஜஹான் ஹஷீம் என்பவர் வந்து போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பயிற்சி பெற்ற 160 தீவிரவாதிகளின் பட்டியல் ஒன்றும் அவர்களின் மொபைல்போன் விபரங்களும் திரட்டப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்