இராணுவ சீருடையில் அடுத்த தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: ஊடகத்திற்கு கசிந்த கடிதம்!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் இராணுவ சீருடையில் ஒரு வாகனத்தை பயன்படுத்தி அடுத்த தாக்குதல் நடத்தப்படலாம் என அமைச்சக பாதுகாப்பு பிரிவின் தலைவர் (எம்.எஸ்.டி), அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருப்பதாக Reuters மற்றும் (dailymail) சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாத குழுக்கள் உடனடித் தாக்குதல்களுக்கு திட்டமிடுகின்றன.

மேலும், இராணுவ சீருடை அணிந்துகொண்டு, ஒரு வாகனத்தின் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

திங்களன்று அதிகாரிகளுக்கு, பொலிஸ் அமைச்சக பாதுகாப்பு பிரிவின் தலைவர் எழுதியிருக்கும் கடிதத்தில் 'மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறு அல்லது திங்கட்கிழமையன்று தாக்குதல் நடத்த ஐந்து இடங்களை தீவிரவாதிகள் இலக்கு வைத்துள்ளனர்.

இராணுவத் சீருடையில் அணிவகுத்துச் செல்வார்கள் மற்றும் கார் ஒன்றை பயன்படுத்தி இந்த தாக்குதல்களில் ஈடுபடுவார்கள் என்பதை சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமையானது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்த கடிதம் ஒரு புதிய தாக்குதல்கள் குறித்து எச்சரிப்பதாக தெரியவந்துள்ளது.

இது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எழுப்புகிறது. இதன் எதிரொலியாகவே எந்த ஒரு நபரும் முகத்தை மறைக்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செய்தித்தொடர்பாளர் தர்மசிறி பந்தாரா எக்கநாயக்கே அறிவித்திருந்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 253 அப்பாவி பொதுமக்கள் பலியானதோடு, ஏரளாமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்