இலங்கையில் தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தவர்களுக்கு பரிசுத்தொகை: ஒவ்வொருவருக்கும் தலா எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுத்த நபர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பொலிசார் நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் தொடர்புடைய பலரை கைது செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தீவிரவாதிகளை பிடிப்பது தொடர்பாக உதவியாக இருந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ. 500,000 பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல தீவிரவாதிகள் குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த 3 இஸ்லாமிய ஆண்களுக்கு தலா ரூபாய் பத்து லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்