முன்னை நாள் பேர்ன் நகரசபைத் தலைவர் திரு. அலெக்ஸ் செப்பேத் மறைந்தார்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
47Shares
47Shares
ibctamil.com

பேர்ன் நகரத்தின் தலைவராக 2005 முதல் 2016 வரை 12 ஆண்டுகள் பதவி வகித்தவர் சுவிஸ் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரான திரு. செப்பேத் அலெக்ஸ்சாண்டெர் ஆவார்.

ஈரல் புற்றுநோய் காரணமாக இவர் தனது 66 வயதில், 04. 05. 2018 வெள்ளிக்கிழமை தனது குடும்ப வட்டம் சூழந்திருக்க இயற்கை எய்திவிட்டார். இவர் தனது பதிவகைள் துறந்து 16 மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

புற்றுநோய் கண்டறியப்பட்டது முதல் தனது இறப்புவரை இவர் பொதுநிகழ்வுகளில் கலந்துவந்தார். நகரசபைத்தலைவர் பதவியை இவர் துறந்திருந்தபோதும், மாநில அரசியிலில் இருந்து வெளியேறி, சுவிஸ் நடுவன் அரசின் தேசியசபை உறுப்பினராகத் தனது இறப்புவரை இவர் அரசியிலில் ஈடுபட்டிருந்தார்.

பேர்ன் நகரின் நீதிபதியாக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த இவர் தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்ட மனிதனாக விளங்கினார்.

பாராளுமன்ற வளாகம் போக்குவரத்து அற்ற நடைபாதையாக மாறுவதற்கு இவரின் தொடர் செயற்பாடுகள் காரணமாக அமைந்தன.

2001ம் ஆண்டு உள்ளூர் ஆட்சி சபைத் தேர்தலில் அரசியலில் நுழைந்த இவர் 2005 முதல் மாநில அரசியலிலும் அதற்கடுத்து நடுவன் அரசின் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

மக்களுடன் மக்களாக, நெருக்கமாக இருக்கும் தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். வழமையான பொதுப்போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வது இவரது இயல்பாகும்.

நகரில் மறோனி எனும் சிற்றுண்டி விற்கும் தொழிலாளி முதல் வீதியோர கடைகள் வரை வேலைசெய்யும் அனைவருடனும் நேரில் சென்று உரையாடி மக்கள் மனநிலையை புரிந்துகொள்வதை தனது வழக்கமாக்கி வாழ்ந்திருந்தார்.

பேர்ன் மாநிலத்தில் அமைந்திருக்கும் பல்சமய இல்லம் எனும் திட்டம் உருப்பெறுவதில் இவரது உழைப்பு பெரும் பங்காகும். அரசின் நிலத்தினை பல்சமய அறக்கட்டளைக்கு ஒதுக்கினார், இத்திட்டம் பேர்ன் அரசால் ஏற்றுக்கொள்ளப்பெற்று, கட்டடம் கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் இலகுவாக கிடைக்க வழிகாட்டினார்.

சுவிற்சர்லாந்து அரசியற் பிரமுகர்கள் முதல் தலைலாமா வரை, ஐரோப்பிய அரசியற் தலைவர்கள் முதல் உலகநாட்டுத் தலைவர்கள் வரை பேர்ன் நகரிற்கு வருகை அளித்தால் அவர்களைப் பல்சமய இல்லத்திற்கும் அதன் பங்காளரான சைவநெறிக்கூடம் அறங்காவல் செய்யும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கும் அழைத்துவந்து அளவளாவி, பேர்ன் நகரின் பெருமையில் ஒன்றாக பல்சமய இல்லத்தை அறியச் செய்தார்.

ஈழத்தமிழ் அமைப்பான சைவநெறிக்கூடம் பல்சமய இல்லத்தில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைக்க, திருக்கோவில் கட்டும் பணிக்கு 1 500 000 சுவிஸ் பிராங்குகள் வரை திருப்பணிச் செலவு ஏற்படும், அதனைச் சைவநெறிக்கூடம் தவறாது செலுத்தும் எனும் ஒப்ந்தம் கைச்சாத்திட்டபோது உடன் இவருந்தவர் இவராவார்.

ஈழத்தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர் பிரிந்த செய்தி கேட்டு சைவநெறிக்கூடம் பல்சமய இல்லத்துடன் இணைந்து இரங்கலை அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு எழுத்துமூலம் தெரிவித்திருந்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்