சுவிட்சர்லாந்தின் மிகவும் ஆபத்தான நபர் கைது: அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 6 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட வில்லியம் என்பவரை பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மண்டலத்தில் 6 சிறார்களை துஸ்பிரயோகம் செய்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுவிக்கப்பட்ட வில்லியம் என்பவரை பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் சிக்கிய வில்லியம், சிறை தண்டனைக்கும் தொடர்ந்து சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டார்.

ஏற்கனவே இவர் மீது 5 சிறார் துஸ்பிரயோக வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இந்த நிலையில் நீண்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் அதிகாரிகளின் குளறுபடியால் வில்லியன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை நிராகரித்த வில்லியம், நீண்ட 10 ஆண்டுகளில் 239 முறை உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இருப்பினும் அவரிடத்தில் துளியளவும் மாற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து மிகவும் ஆபத்தான நபர் என்ற பட்டியலில் வில்லியத்தின் பெயரை இணைத்த காவல்துறை அதிகாரிகள்,

அவரை விடுவிப்பது பெரும் ஆபத்தாக முடியலாம் என கருதிய அதிகாரிகள் கணுக்கால் காப்பு அணிவித்து விடுவித்தனர்.

இருப்பினும் அவர் சர்வசாதாரணமாக புழங்கியது அதிகாரிகளை இந்த முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

இதனையடுத்து 2006 ஆம் ஆண்டு வில்லியத்தை கைது செய்த அதே அதிகாரியே தற்போதும் அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரால் பாதிக்கப்பட்ட செலினா என்பவர், வில்லியத்தின் விடுதலை முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

வில்லியம் எந்த அளவுக்கு ஆபத்தானவர் என்பதை நன்கு உணர்ந்திருந்த பொலிசார், தற்போது அவரை மீண்டும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்