வாகன சோதனையில் சந்தேகத்துக்குரிய வகையில் சிக்கிய கார்: காரில் என்ன இருந்தது தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் Vaud பகுதியில் கார் பார்க்கிங் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள், காரின் பின் பகுதியில் 189 கிலோ இறைச்சி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

வழக்கத்துக்கு மாறாக பொருட்கள் திணிக்கப்பட்டிருப்பதைக் கண்ட பொலிசார் காரின் பின் பகுதியை திறந்தபோது, அதில் தோலுரிக்கப்பட்ட இரண்டு முழு ஆடுகள், 30 கிலோ கோழிக்கறி, 30 கிலோ மாட்டிறைச்சி என மொத்தம் 189 கிலோ இறைச்சி இருந்தது.

விசாரணையில், தான் பிரான்சிலிருந்து அந்த இறைச்சியை வாங்கி வந்ததாக அந்த நபர் தெரிவித்தார்.

அந்த நபர் கைது செய்யப்பட்டதோடு, அந்த இறைச்சியும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

சுங்கச் சட்டம், VAT சட்டம், மற்றும் உணவு விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு பல ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers