சுவிட்சர்லாந்தில் மரணத்தை நேரில் பார்த்த நேருவும் நடிகர் சார்லி சாப்ளினும்: வெளிவராத தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிரபல கொமடி நடிகர் சார்லி சாப்ளினும் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவும் சாலை விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றை மட்டுமின்றி, உலக திரைப்படத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தக் கூடிய அந்த நிகழ்வு சுவிட்சர்லாந்தில் 1953 ஆம் ஆண்டு அரங்கேறியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள பிரதமர் நேரு சென்றுள்ளார்.

இந்த உச்ச மாநாடுக்கு பின்னர் சில நாட்கள் நேருவும் அவரது மகள் இந்திராவும் சுவிட்சர்லாந்தில் தங்கி இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

நேரு ஓய்வெடுத்துக் கொள்ளும் இந்த நாட்களில் அவருடன் கலந்துரையாட பிரபல கொமடி நடிகர் சார்லி சாப்ளினை வரவழைத்திருந்தனர்.

சார்லி சாப்ளின் Corsier-sur-Vevey பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேருவும் சாப்ளினும் சுவிட்சர்லாந்துக்கான இந்திய தூதரின் காரிலும், நேருவின் முக்கிய செயலாளர் எம்.ஓ.மத்தாய் மற்றும் தூதர் ஆகிய இருவரும் இன்னொரு காரிலும் சாப்ளினின் குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக குறுக்கு வழியே இந்த நால்வரும் இரு கார்களில் விரைந்துள்ளனர்.

வழி நெடுகே நேருவும் சாப்ளினும் ஓயாமல் பல்வேறு கதைகள் பேசியபடியே சென்றுள்ளனர்.

குறுகலான சாலையில் விரைந்தபடியே சென்ற கார் திடீரென்று ஒருகட்டத்தில் அதன் சாரதியால் நிறுத்தப்பட்டது.

கார் விரைந்த வேகத்தில் நிறுத்தப்பட்டதும், அதில் இருந்த முக்கிய பயணிகள் இருவரும் நிலைகுலைந்துள்ளனர்.

அந்த சாலையின் எதிரே வந்த வாகனம் ஒன்றில் மோதாமல் இருக்கவே நேரு சென்ற காரின் சாரதி திடீரென்று காரை நிறுத்தியுள்ளார்.

இதில் அந்த வாகனமானது தடுமாறி மறிந்திருக்கலாம் எனவும், அதில் பயணம் செய்த நேருவும் சாப்ளினும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் மத்தாய் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி நேருவும் சாப்ளினும் உயிர் தப்பியுள்ளனர். மரணத்தை நேரில் பார்த்த இந்த தருணத்தை சுவிட்சர்லாந்துக்கான இந்திய தூதர் மேத்தா தமது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

காயமின்றி தப்பிய சாப்ளின் மற்றும் நேரு, பின்னர் சாப்ளினின் இல்லத்தில் வைத்து மதிய உணவருந்தியுள்ளனர்.

அடுத்த நாள் அங்கிருந்து ஜெனீவா புறப்பட்டு சென்ற நேரு, அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

நேருவின் சுவிஸ் விஜயத்தின்போது ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்