பிரெக்சிட்டுக்குப் பின்னரும் பிரித்தானியர்களுக்கு சுவிட்சர்லாந்து நிறுவனங்களில் வேலை உறுதி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டாலும், பிரெக்சிட்டுக்குப் பின்னரும் சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் பிரித்தானியர்களை பணிக்கமர்த்தலாம் என்னும் விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டாலும், பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாட்டு பணியாளர்களும் மற்ற நாட்டில் பரஸ்பரம் பணியாற்றலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்காக சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும் பொலிஸ் துறை அமைச்சரான Karin Keller-Sutter லண்டனுக்கு சென்றிருந்தார்.

ஏற்கனவே இரு நாடுகளும் பிரெக்சிட்டுக்கு பிறகு தத்தம் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளார்கள் என்றாலும், இந்த புதிய ஒப்பந்தம் பிரெக்சிட்டுக்குப்பின் சுவிஸ் பணியாளர்கள்

பிரித்தானியாவிலும், பிரித்தானிய பணியாளர்கள் சுவிட்சர்லாந்திலும் பணி செய்வதற்கான உறுதியை அளிக்கிறது.

இந்த ஒப்பந்தம், பிரித்தானியா ஐரோப்பியஒன்றியத்தை விட்டு ஒப்பந்தங்கள் எதுவுமின்றி வெளியேறினால் மட்டுமே செல்லுபடியாகும், அதுவும் 2020 இறுதி வரை மட்டுமே அது பயன்பாட்டில் இருக்கும்.

ஒப்பந்தம் ஒன்றுடன் பிரித்தானியா வெளியேறினால், இப்போது இருக்கும் பழைய ஒப்பந்தமே தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்