சுவிட்சர்லாந்தில் சமீபத்திய தேர்தலைத் தொடர்ந்து புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு என்ன நன்கொடைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்த வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி புத்தகம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதில் என்ன நன்கொடை வாங்கலாம், என்ன வாங்கினால் அது லஞ்சமாக கருதப்படும் என்பது குறித்த விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நேர உணவுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 115 சுவிஸ் ஃப்ராங்குகள் வாங்கலாம்.
ஒரு இரவு தங்குவதற்காக 180 சுவிஸ் ஃப்ராங்குகள் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால் பிரச்னை ஏற்படலாம்.
சுவிஸ் வழக்கப்படி பரிசுகளை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக பார்ட்டிக்கு வரும் ஒருவர், ஒரு ஒயின் பாட்டிலைக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம்.
ஆனால் குடும்பத்தினர் அல்லாத ஒருவரிடமிருந்து பிறந்த நாள் அல்லது கிறிஸ்துமஸ் பரிசுகளை பெறக்கூடாது.
இப்படி பல அறிவுரைகளை வழங்கும் அந்த புத்தகம், ஒரு விடயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, உங்களுக்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்!