சீனாவில் தங்கவே விரும்புகிறேன்: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சுவிஸ் நாட்டவரின் முடிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சீனாவின் தவு பகுதியில் குடியிருக்கும் சுவிஸ் நாட்டவர் ஒருவர் மனைவி பிள்ளைகளை விட்டு வெளியேற விரும்பவில்லை என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியை சேர்ந்தவர் அந்த 70 வயது நபர். தற்போது சீனாவின் தவு பகுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார்.

ஆண்டுக்கு சில மாதங்கள் தவு பகுதியில் குடியிருக்கும் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தங்கிச் செல்லும் இவர்,

தற்போது கொரோனா காரணமாக சீன அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தவு பகுதியில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்பு உருவான வுஹான் நகரில் இருந்து 70 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது தவு.

கடந்த சனிக்கிழமை தலைநகர் பீஜிங்கில் சந்திப்பு ஒன்றிற்காக புறப்பட தயாரான நிலையில்,

புறப்படும் 2 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சீன ரயில் நிலையங்களையும் அதிகாரிகள் மூடிவிட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள சுவிஸ் குடிமக்கள் பிரெஞ்சு விமானம் மூலம் நாட்டுக்கு திரும்பலாம் என சுவிஸ் வெளியுறவுத் துறை அனுமதித்துள்ள தகவல் வெளியானது.

ஆனால் தவு பகுதியில் சிக்கியுள்ள இவருக்கு சீன மொழி தெரியாது என்பதால் அங்கிருந்து, அதிகாரிகள் உதவியுடன் பிரான்ஸ் தூதரகம் செல்ல முடியாத நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பாதிப்புக்கு உள்ளா இடத்திலேயே இருப்பது மற்றும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது உண்மையில் தொற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்