மகன் கண்முன்னே இருமல், வாந்தியுடன் சுருண்டு விழுந்த சுவிஸ் தாயார்: மருத்துவ சோதனையில் தெரியவந்த உண்மை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தாயார் ஒருவர் தமது இளவயது மகன் கண் முன்னே, இருமியபடியே வாந்தியுடன் சுருண்டு விழுந்த சம்பவத்தில் உண்மை பின்னணி வெளியானது.

ஆர்காவ் மண்டலத்தில் கடந்த 2015 மே மாதம் 54 வயது தாயார் ஒருவர் தமது 22 வயது மகன் முன்னிலையில் சுருண்டு விழுந்துள்ளார்.

இருமியபடி இருந்தவர் திடீரென்று வாந்தி எடுக்கவும், அதைத் தொடர்ந்து அவர் சுருண்டு விழுந்துள்ளார்.

தொடர்ந்து அவரை ஆர்காவ் மண்டல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் கோமா நிலைக்கு சென்ற அவர், பின்னர் மரணமடைந்தார்.

இந்த விவகாரத்தில் குறித்த பெண்மணி மரணமடைந்தது தவறான மருந்து உட்கொண்டதாலையே என்பது மருத்துவ சோதனையில் தெரியவந்தது.

ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண்மணிக்கு, குறிப்பிட்ட மருத்துவரும் மருந்தாளரும் அளித்த மருந்து தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க கோரப்பட்டுள்ளது.

முன்னர் குல்ம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மருத்துவரை விடுவித்ததுடன் மருந்தாளர் கவனக்குறைவாக செயல்பட்டு குறித்த பெண்மணியின் மரணத்திற்கு காரணமானார் என தீர்ப்பு வழங்கியது.

ஆனால், தங்களின் பார்வையில் மருத்துவரும் மருந்தாளரும் குற்றவாளிகளே என பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்