இளம்பெண்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்... கோமா நிலைக்கு சென்ற பெண்: பிரான்ஸ் நாட்டு இளைஞர்களுக்கு சிறை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவா இரவு விடுதி முன்பு இளம்பெண்கள் ஐவரை பிரான்ஸ் நாட்டு இளைஞர்கள் சிலர் கண்மூடித்தனமாக தாக்கிய வழக்கில் நான்கு பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அதிகாலை நேரத்தில் ஜெனீவா இரவு விடுதி

ஒன்றின் முன்பு ஒரு இளம்பெண்ணை சில இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.

அவருக்கு உதவ வந்த அவரது தோழிகளும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு, ஒரு பெண் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இந்த வழக்கு சுவிட்சர்லாந்து முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பிரான்ஸ் நாட்டு இளைஞர்களில் நான்குபேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

22 வயதான 2 பேரில் ஒருவருக்கு எட்டு ஆண்டுகளும் மற்றொருவருக்கு ஐந்து ஆண்டுகளும், மூன்றாவது நபர் ஒருவருக்கு (24 வயது) நான்கு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்காவது நருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்