சுவிஸில் மொத்தமாக திருடுபோன 26 ஆடுகள்: விசாரணையில் பொலிசாரை மிரள வைத்த இளைஞர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தமது பொருளாதார தேவைகளுக்காக இளைஞர் ஒருவர் ஆடு, கோழி என திருடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாட் மண்டலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆடு, கோழி என திருட்டு சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களால் இதுவரை அந்த திருடனை சிக்க வைக்கவே முடியாமல் போனது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரே ஒரு பண்ணையில் இருந்து மொத்தமாக 26 ஆடுகளை திருடியுள்ளார் அந்த இளைஞர்.

இது மொத்தமும் திருடப்பட்ட ஆடுகள் என தெரிந்தே, திருடிய இளைஞரிடம் இருந்து அந்த ஆடுகளை விலைக்கு வாங்கியுள்ளார் ஒருவர்.

ஆனால், மனக்குழப்பமடைந்த அந்த நபர், இதை பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளார். இதனையடுத்து அந்த 22 வயது திருடனை மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர்.

போதிய தொழில் இல்லை என்பதாலையே, தாம் திருடியதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த இளைஞர் 50 செம்மறியாடுகள், 33 செம்மறிஆட்டுக்குட்டிகள், 19 கோழிகள், 5 ஆடுகள் மற்றும் 5 ஆமைகளை திருடியதாகக் கூறப்படுகிறது.

மேலும் திருடப்படும் ஆடு, கோழிகளை அவர் உடனே விற்பனை செய்வது இல்லை எனவும், தமது தோட்டத்தில் சில நாட்கள் பராமரிப்பார் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் உயிரியல் பூங்காவில் இருந்தும் ஆமைகளை திருடியதாகவும், கெபாப் கடைகளுக்கு இவர் ஆடுகளை விற்பனை செய்ததுண்டு எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்