சுவிஸ் விமான சேவை ஊழியர்கள் பணிக்கு திரும்ப மறுப்பு: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா ஆபத்து மிகுந்த பகுதிகளுக்கு பயணப்பட நேரலாம் என்ற பயத்தில், சுவிஸ் விமான சேவை ஊழியர்கள் அதிகளவில் பணிக்கு திரும்ப மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சமீபத்திய சில வாரங்களாக சுவிஸ் விமான சேவை ஊழியர்கள் பலர் பணிக்கு திரும்ப மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் சங்க தலைவரும் உறுதி செய்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் சில வழித்தடங்களில் சேவையை மறுக்க சுவிஸ் விமானப் பணியாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

உளவியல் மற்றும் தனிப்பட்ட மன அழுத்தம் காரணமாக நெருக்கடி நிறைந்த பகுதியில் நிறுத்தப்படுவார்கள் என்று அஞ்சும் எவரும் தங்கள் பணி நேரத்தை ரத்து செய்யலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது.

தற்போது உலகின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதால் விமான ஊழியர்களும் தங்கள் உயிருக்கு அஞ்சுவதாக கூறப்படுகிறது.

ஆனால் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவோம் என்ற அச்சம் மட்டுமல்ல, சில ஊழியர்களை தங்கள் வேலையைத் தொடங்குவதைத் தடுக்கின்றன. சில நாடுகளில் தற்போது அமுலுக்கு கொண்டுவந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட விதிகளும் மறுப்பதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஷாங்காய் விமான நிலையத்தில் நீங்கள் உங்கள் ஹொட்டல் அறையை விட்டு வெளியேறக்கூடாது என்பதும், 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்க நேரிட்டால் ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்படும் என்பதும் சுவிஸ் விமான சேவை ஊழியர்களை தங்கள் பணிக்கு திரும்புவதில் இருந்து தடுப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்