பல லட்சம் டொலர்கள் திருட்டு: ஹேக்கர்களின் கைவரிசையினால் நிறுத்தப்படும் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஒன்லைன் ஊடான பணக் கொடுக்கல் வாங்கல்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்பட்ட வண்ணமே இருக்கின்றது.

அண்மையிலும் தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் அப்பிளிக்கேஷன் ஒன்றின் ஊடாக பல லட்சம் டொலர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டிருந்து 7-Eleven எனும் அப்பிளிக்கேஷன் ஊடாகவே இக் கொள்ளையடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனை 7Pay நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

குறித்த சம்பவத்தின் மூலம் சுமார் 500,000 டொலர்கள் திருடப்பட்டதை அடுத்து குறித்த அப்பிளிக்கேஷனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 1 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மொபைல் பில்களின் Barcode இனை ஸ்கான் செய்து கிரடிட் மற்றும் டெபிட் காட் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்