வரலாறு படைத்தார் ஜோகோவிச்! அவுஸ்திரலியா ஓபனில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை

Report Print Basu in ரெனிஸ்
0Shares

அவுஸ்திரேலியா ஓபன் ரெனிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் மெட்வதேவை வென்று 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் வரலாறு படைத்துள்ளார்.

கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 22ம் திகதி நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)- நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவ் (ரஷியா) மோதினார்.

இதில், (7-5), (6-2), (6-2) என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்.

இதுவரை 9 முறை அவுஸ்திரேலியா ஓபனில் இறுதிப்போட்டியில் விளையாடி உள்ள ஜோகோவிச் ஒரு முறை கூட தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்வதேவை வீழ்த்தியதின் மூலம் 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று பட்டையை கிளப்பியுள்ளார் ஜோகோவிச்.

அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற வீரர்களில் முதல் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (20), ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (20) ஆகியோருக்கு அடுத்தபடியாக 18 பட்டங்களை வென்று ஜோகோவிச் உள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்