ஜப்பானின் ஒத்துழைப்புடன் கொழும்பில் இலகு ரயில்

Report Print Ajith Ajith in போக்குவரத்து

இலங்கை அரசாங்கத்துடன் ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகமான ஜெய்கா நேற்று உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ள இலகு ரயில் திட்டம் தொடர்பிலேயே இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஜப்பான் 30.04 பில்லியன் யென்னை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளது.

இதன் ஊடாக கொழும்பின் 15.7 கிலோமீற்றர் தூரத்தை 16 நிலையங்கள் ஊடாக கடக்கும் ரயில் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த திட்டத்தின் மூலம் நகர மாசுப்படலையும் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்